முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை: வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டருக்கு அருகில் இருக்கும் தனியார் வணிக வளாகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட நிறுவனங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகின்றன. அந்த வளாகத்தில் மூன்றாவது தளத்தில் இருக்கும் கணினினி விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து நடந்துள்ளது. முதல் கட்டமாக 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

ராட்சத கிரேன் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்கட்டடத்தில் இருக்கும் நபர்களை வெளியேற்ற தீயணைப்பு வீரர்கள் 30 மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கின்போது இங்கு கடைகள் பூட்டபட்டதாகவும், சமீபகாலத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் இயங்கிவந்தன என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:

Related posts

“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்..!” – டிடிவி

Jayapriya

அரசு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பேற்றார் திண்டுக்கல் லியோனி

Saravana Kumar

95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!