முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

ஹாலிவுட் நடிகை செலினா கோம்ஸ் பிறந்தநாள் இன்று

அமெரிக்காவின் டெக்ஸாஸில் பிறந்த நடிகை செலினா கோம்ஸ் தனது திரைப்பயணத்தை 2002-ல் குழந்தை நட்சத்திரமாக barney and friends என்னும் தொலைக்காட்சி தொடரில் தொடங்கினார்.

செலினா அடிப்படையில் ஒரு பாடகர். செலினா தனது துறையில் Guinness world records உட்பட பல நூறு விருதுகளைப் பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டின் புள்ளியியல் தரவின்படி, செலினாவின் 70 லட்சம் ஆல்பங்கள் மற்றும் 2 கோடியே 20 லட்சம் singles-கள் உலகெங்கிலும் விற்கப்பட்டுள்ளன. செலினா தனது இசை நடையை பாப் மற்றும் எலெக்ட்ரோ பாப் என்று விவரித்துக் கொண்டார்.

செலினா கோம்ஸ்

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். ஒரு கட்டத்தில் இன்ஸ்டாகிராமில் மக்களால் அதிகம் தொடரப்பட்ட பிரபலமாக இருந்துள்ளார்.

தனது 17-வது வயதில் ஐ.நா குழந்தைகள் நல அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
ஓரினச் சேர்க்கையாளர்களின் போராட்டம் மற்றும் கருப்பின மக்களின் பிரச்னைகளுக்காக செலினா கோம்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், கொரொனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வில் பல பிரபலங்களோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.

யூடியூப்பில் தனது பாடல்களால் உலகெங்கும் பல கோடி ரசிகர்களை ஈர்த்துள்ளார். இன்று 29-வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

Advertisement:

Related posts

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Ezhilarasan

தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!

போரிஸ் ஜான்சனின் தந்தை பிரான்ஸ் குடியுரிமை கேட்டு விண்ணப்பம்!

Niruban Chakkaaravarthi