பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இன்று இறுதிப்போட்டி… ஜோகோவிச் – கேஸ்பர் ரூட் பலப்பரீட்சை!…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், நார்வே வீரர் கேஸ்பர் ரூட்டும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் இன்று மோத உள்ளனர்.

ஜோகோவிச் 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை முறியடிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறார். அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச், நடால் தலா 22 பட்டங்களுடன் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனை ஸ்வியாட்டெக் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். உலகின் 43-வது நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை 2-1 என்ற கணக்கில் ஸ்வியாட்டெக் அபாரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்வியாட்டெக், 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.