மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு; கடைமடை பகுதிகளுக்கு எப்போது நீர் சென்றடையும்?

மேட்டூர் அணையில் நாளை திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு எப்போது சென்றடையும் என்பது குறித்து பார்க்கலாம்… மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல 75 நாட்களாகும். மேட்டூர் அணையில் திறக்கப்படும்…

மேட்டூர் அணையில் நாளை திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு எப்போது சென்றடையும் என்பது குறித்து பார்க்கலாம்…

மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல 75 நாட்களாகும். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரானது மின்சார வாரியம் மூலமாக காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 7 தடுப்பணைகளின் மூலம் மின்உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு,

பின்னர் 81.7 கி.மீ தூரத்தில் ஜேடர் பாளையத்தில் உள்ள தடுப்பணையை அடைகிறது. அங்கிருந்து 135 கிலோ மீட்டர் தூரத்தில் மாயனூரில் உள்ள கட்டளை கதவணையினை 14 மணி நேரத்தில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கிருந்து கிளை வாய்க்கால்களின் மூலமாக பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் 177 கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் உள்ள மேலணைக்கு 48 மணி நேரத்தில் சென்றடையும்.அங்கிருந்து கல்லணைக்கு 12 மணி நேரத்தில் அதாவது மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் கல்லணைக்கு மூன்று நாட்களில் சென்றடைகிறது.

கல்லணையில் இருந்து பிரியும் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மூலம் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கும், கொள்ளிடம் ஆற்றின் மூலம் அணைக்கரைக்கும் பாசனத்திற்காக வழங்கப்படுகிறது. அதேபோல், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள 19 வாய்க்கால்களுக்கும் பாசனத்திற்காக நீர் வழங்கப்படுகிறது.

கல்லணைக்கு சென்றடையும் காவேரி 24 பிரிவுகளாகவும், வெண்ணாறு 17 பிரிவுகளாகவும், கல்லணை கால்வாய் 27 வாய்கால்களாகவும் பிரிந்து கடைமடைக்கு தண்ணீர் சென்றடைகிறது. மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வாய்கால்கள் மூலம் பாசனத்திற்காக 45 நாட்கள் முதல் 75 நாட்களுக்குள் சென்றடைகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.