பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் செர்பிய வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் கிரீஸ் நாட்டின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் மோதினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே யாருக்கு வெற்றி என்பதில் கடும்போட்டிய நிலவியது. இதில் முதல் இரண்டு செட்டுகளை சிட்சிபாஸ் கைப்பற்றியதால் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அடுத்த 3 செட்டுகளையும் ஜோகோவிச் கைப்பற்றி வெற்றியை தன் பக்கம் திருப்பினார். இதனால், 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் கோப்பையை தட்டி சென்றார்.