தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

தாம்பரம் அருகே ஜல்லி கற்களை ஏற்றி வந்த ரயிலின் என்ஜின் தடம்புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சரக்கு ரயில் ஒன்று 16 பெட்டிகளில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே ரயிலின் என்ஞின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தில் இருந்து தடம் புறண்டது.

இதனையடுத்து சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தி ஜல்லி கற்களுடன் இருந்த பெட்டிகளை துண்டித்தார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் மீட்பு ஊழியர்களுடன் விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, ஜல்லி கற்கள் நிரப்பப்பட்ட 16 பெட்டிகளும் என்ஜினில் இருந்து கழற்றப்பட்டு, பின்நோக்கி பாதுகாப்பாக இழுத்து செல்லப்பட்டன.

எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை தண்டாவளத்தில் உள்ள ஜல்லி கற்களை அப்புறபடுத்தி புதிய ஜல்லி கற்களை மாற்றுவதற்காக ரயிலில் கொண்டவரபட்ட போது விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.