சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாஃபர் சேட் மற்றும் அவரது மனைவி பர்வின் ஜாஃபர் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வின் ஜாஃபர், லாண்ட்மார்க் நிறுவன உரிமையாளர் உதயகுமார் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா ஷங்கர் ஆகியோருக்கு சொந்தமான 14.23 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனை ஒதுக்கீடு செய்தலில் எழுந்த முறைகேடு புகாரில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்த போது, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாஃபர் சேட்டிற்கும், ராஜாமணிகத்தின் மகன் துர்காஷங்கர்ருக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்ததாக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பேருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.
ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை விதிகளுக்கு புறம்பாக வீட்டுமனைகளாக்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்து 14.86 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.








