முக்கியச் செய்திகள் தமிழகம்

ஃப்ரீ ஃபயர் விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டுகிறது-உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் மூழ்கி நண்பர்களுடன் சென்ற பெண்ணை கண்டுபிடித்து தர கோரி, நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காணாமல் போனதாக கூறப்படும் பெண் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்ததால் வழக்கை முடித்து நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

முன்னதாக, நீதிபதிகள் கூறியதாவது:

தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை. தற்பொழுது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் அவரவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-சீமான் வலியுறுத்தல்

Web Editor

நேபாளத்தில் கோலாகலமாக நடைபெற்ற பசு திருவிழா

Gayathri Venkatesan

கால்பந்து வீராங்கனை மரணம்; டாக்டர்களை கைது செய்தால் போராட்டம்

G SaravanaKumar