முக்கியச் செய்திகள் இந்தியா

கறுப்புச் சட்டை அணிந்து போராடி ராமர் கோயிலுக்கு எதிர்ப்பை காட்டுகிறது காங்கிரஸ்- அமித்ஷா

கறுப்புச் சட்டை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மறைமுகமாக எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

விலைவாசி உயர்வு, பாக்கெட்டுக்களில் அடைக்கப்பட்ட அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டத்தில் கறுப்புச் சட்டை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி, மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மற்று நேரங்களில் கறுப்புச் சட்டை  அணிந்து போராடாத காங்கிரஸ் கட்சியினர் ஆகஸ்ட் 5ந்தேதியான இன்று கறுப்புச் சட்டை அணிந்து போராடுவதற்கு ஒரு மறைமுக காரணம் இருப்பதாக குறிப்பிட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட தினமான இன்று கறுப்புச் சட்டை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் போராடியிருப்பதன் மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செய்தியை மறைமுகமாக பொதுமக்களுக்கு தெரிவிக்க காங்கிரஸ் விரும்புவதாகக் கூறினார். இது போன்ற அரசியலில் ஈடுபடுவதுதான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்தார்.

சுதந்திரமடைந்ததிலிருந்து பெரும்பாலான ஆண்டுகள் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டபோதிலும் அக்கட்சியால் அயோத்தி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண முடியவில்லை எனக் கூறிய அமித்ஷா, ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளதாகக் கூறினார்.   அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்கப்பட்டபோது, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அனைவரும் கட்டுப்பட்டு ஆக வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்

Arivazhagan Chinnasamy

நாளை முதல் விடுமுறை நாட்களிலும் வங்கிகளில் சம்பளம் வரவு வைக்க‍லாம்: ஆர்பிஐ அதிரடி உத்த‍ரவு

EZHILARASAN D

இணையத்தை கலக்கும் சைக்கிள் பயணம்

G SaravanaKumar