என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றி பணத்தைப் பறித்துச் சென்ற மோசடி கும்பல். பணத்தைப் பறிகொடுத்தவரிடம் 10ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நபரின் திட்டமே போலி நாடகம் விசாரணையில் அம்பலம்.
சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஐயப்ப செட்டி தெருவில் வசித்து வருபவர் முகமது
அப்துல் வயது(39) இவர் சகோதரர்களுடன் சென்னை பர்மா பஜாரில் வெளிநாட்டுப்
பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 13-ம்
தேதி காலை ஜமாலின் வீட்டிற்கு நான்கு பேர் கொண்ட கும்பல் சென்று, தங்களை
என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்றும், கோவை குண்டுவெடிப்பு காரணமாக உங்களது வீட்டில்
சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த 10 லட்ச ரூபாய் பறித்துச் கொண்டு மேலும் கடையிலும் சோதனை நடத்த வேண்டும் எனக் கூறி கடையில் இருந்த 10 லட்ச ரூபாயும் பறித்துச் சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து சந்தேகம் அடைந்த முகமது அப்துல் விசாரணை செய்ததில் வந்த நபர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்ததால், இதுதொடர்பாக சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்துல் ஜமாலின் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களை கொண்டு விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமராவில் ஜமால் வீட்டுக்கு வந்த நபர்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தது பதிவாகியிருந்த நிலையில், கொள்ளை அடித்த நபர்கள் யார் என்பதும், அப்துல் ஜமாலுக்கு தெரிந்த நபர்களா என்பது குறித்தும் பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை பிடிக்க துறைமுக உதவியாளர் வீரக்குமார் மேற்பார்வையில் முத்தியால் பேட்டை ஆய்வாளர்கள் இளங்கோவன்.
சபிப்புல்லா தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் பென்சில் பேட்டரி சேர்ந்த, பா.ஜ.க நிர்வாகியான வேலு(எ) வேங்கை அமரன்,வயது(35) செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பாயாக பணியாற்றி வரும் புஷ்பராஜ், வயது ((38) மற்றும் விஜயகுமார், வயது (47) பல்லவன் சாலைப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வயது(31) வண்ணாரப்பேட்டை தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் வயது (31) திருவெற்றியூரை சேர்ந்த ரவி வயது (44) ஆகிய 6 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவர்கள் ஆறு பேரையும் முத்தியால்பேட்டை போலீசார் போலீஸ் காவல் எடுத்து விசாரணை நடத்தினர் கொள்ளையர்கள் முதலில் 20 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ம்சென்றதாக தகவல் வெளியானநிலையில், 2 கோடி 30 லட்சம்ரூபாய் கொள்ளைப் போனதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்ற காவலில் இருந்த 6 பேரிடமும், விசாரணை செய்ய, முத்தியால் பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 6 நாள் விசாரித்துக்கொள்ள சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அனுமதி அளித்து
உத்தரவிட்டது.
அதன் பெயரில் போலிசார் விசாரணை நடத்தினர் மேலும் இது தொடர்பாக
கடையில் வேலை பார்த்த பாரிமுனை மலையப்பன் தெருவை சேர்ந்த சையது முகமது சிதிக் வயது 38 என்பவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க நண்பர்களுடன் திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவல் பேரில் அவருடைய அண்ணன் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சேர்ந்த அலி ஜாஸ்மின் வயது 42 மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்த முகமது பாசில் வயது 30 ஆகிய இருவரும் கைது செய்து 9 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்களிடமிருந்து 1 கோடியே 65 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர் மூன்று பேர் மற்றும் சரணடைந்த ஆறு பேரையும் போலீஸ் காவல் முடிந்து மொத்தம் 9 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் மன்னடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பாக மூன்று பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.







