ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி மோசடி… வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை

நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல்…

நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது நடிகர்கள் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேவை எனவும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மணிகண்டன் என்ற நபர் போலி விளம்பரத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ நாராயணன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மோசடி, ஐடி சட்டப்பிரிவு என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.