30 ஆண்டுகளுக்கு முன் 50 டாலர்களை பெற்றுக்கொண்டு அமெரிக்க நிறுவனம் விருது ஒன்றை எனக்கு வழங்கியது. பணம் பெற்று விருது வழங்கும் மோசடி வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து விட்டது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை இணைந்து நடத்தும்
இரண்டு நாள் பயிலரங்கம் இன்று தொடங்கியது. கணினி தமிழ்த் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல்,பொறியியல் தொழில் நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் தொடர்பாக இரண்டு நாள் பயிலரங்கம் இன்று தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் நடராஜன் மற்றும்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனையும் படியுங்கள்: பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: முக்கிய குற்றவாளி ஹரீஷ் தலைமறைவு!
நிகழ்ச்சியில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்ததாவது..
இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது தாய் மொழியில் கல்வி கற்காமல்
இருப்பது தான். நமது தாய் மொழியில் கல்வி கற்றால் தான் புதிய சிந்தனைகள்
தோன்றும். உலகில் வளர்ந்த நாடுகள்,வளரும் நாடுகளில் எல்லாம் தாய் மொழியில் கல்வி
வழங்கப்படுகிறது.
மென்பொருள் தொழில் நுட்பம் வளர்ந்த பிறகு தான் இந்தியா வளர தொடங்கியது. அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் நமது தாய் மொழியில் இருக்க வேண்டும். பொறியியல் படிக்க வரும் சில மாணவர்களுக்கு தமிழ் எழுத தெரியாமல் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர். தமிழில் எழுத தெரியாதவர்கள் வெட்கப்பட வேண்டும்” என வேல்ராஜ் தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்ததாவது..
பொறியியல் கல்லூரிகளில் மூன்று பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள பாடப்பிரிவுகளையும் தமிழ் மொழிப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம்
முயற்ச்சித்து வருகிறது.
தமிழர்களின் தொன்மையை கண்டறிய அண்ணா பல்கலைக்கழகம் முயற்சி செய்து
வருகிறது. தமிழின் தொன்மையை கண்டறிய அகழாய்வு ஆராய்ச்சியில் அண்ணா
பல்கலைக்கழகம் ஈடுபடஉள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறையிடம் 30 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய திட்டம் தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம்.கார்பன் டேட்டிங்
மிஷின் மூலம் அகழாய்வு பொருள்களின் தொன்மையை கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர் மரபும், தமிழர் தொழில்நுட்பமும் என்ற இரண்டு பாடங்கள் இரண்டு பருவங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பதினாறு கல்லூரிகளிலும் 23 தமிழ் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
விருது வழங்குதல் என்ற பெயரில் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் மோசடி நடைபெறும். அது தற்பொழுது இங்கும் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியது குறித்து புகார் அளித்துள்ளோம். அது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையின் சார்பில் எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் இருந்து ஒரு நிறுவனம் எனக்கு விருது
வழங்குவதாக அழைப்பு விடுத்தனர் அதற்காக 58 டாலரை கட்ட வேண்டும் எனவும் கூறினர். நானும் கட்டினேன். அதேபோல என்னிடம் 300 விருதுகள் தற்போது வரை உள்ளன.
விருது வழங்குகிறோம் என்ற பெயரில் சிறப்பான மனிதர்கள் ஒரு சிலரை மற்றும்
அழைத்து விட்டு மற்றவர்களிடம் எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு விருதை வழங்குவது
தான் இவர்களின் திட்டம் ” என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
– யாழன்