சமூக வலைதளங்கள் வாயிலாக Gift அனுப்புவதாக கூறி மோசடி செய்யும் கும்பல்! 2 நைஜீரியர்கள் உள்பட மூவர் கைது!

சமூக வலைதளங்கள் வாயிலாக Gift அனுப்புவதாக கூறி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த 2 நைஜீரியர்கள் உள்பட மூவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம்…

சமூக வலைதளங்கள் வாயிலாக Gift அனுப்புவதாக கூறி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த 2 நைஜீரியர்கள் உள்பட மூவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பழகி Gift அனுப்புவதாக கூறி மோசடி செய்து வந்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் கடந்த 2 வருடங்களாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த கும்பல் சாதுர்யமாக பழகி முழு தகவல்களையும் பெற்றுக்கொண்டு, பின்னர் கஸ்டம்ஸ் ஆபீசர் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த வகையான தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்த போதும், கடந்த 2 வருடங்களாக சிக்காமல் இந்த கும்பல் ஏமாற்றி வந்தது. இந்நிலையில், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் வைத்து நைஜீரிய வை சார்ந்த 40 வயது நிரம்பிய Hugo Fransisco, 28 வயது நிரம்பிய Duru Clindon, மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த Tabitha Ana ஆகியோரை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 2 லேப்டாப், ஆப்பிள் மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரியை சேர்ந்த அஸ்வினி என்ற இளம் பெண் கிப்ட் மோசடியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கஸ்டம்ஸ் ஆபிஸர் போல இந்த இளம் பெண்ணை மிரட்டியதும் இந்த கும்பல் தானா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.