’தேசியம் என்ற பெயரில் புகார்களை மறைக்க அதானி குழுமம் முயற்சி’ – ஹிண்டன்பர்க் அறிக்கை

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை என்பது இந்தியாவின் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குல் என்று அதானி குழுமம்  கூறியதற்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் பதலளித்துள்ளது. அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக…

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை என்பது இந்தியாவின் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குல் என்று அதானி குழுமம்  கூறியதற்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் பதலளித்துள்ளது.

அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து அதானி நிறுவன பங்குகளும் அதானி நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்தது.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பதலளித்து அதானி குழுமம் 413 பக்க அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று கூறப்பட்டுள்ளது.

அதானியின் அறிக்கைக்கு பதலளித்துள்ள ஹிண்டபர்க் நிறுவனம், முக்கியமான குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல் ’தேசியம்’ என்ற பெயரில்  புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிக்கிறது.  இந்தியா ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாடு. வளர்ந்து வரும் வல்லரசு நாடாகும். ஆனால்,  அதானி குழுமத்தால் இந்தியாவின் வளர்ச்சி தடைபடும் என நாங்கள் நம்புகிறோம். தேசிய கொடியை போர்த்திக்கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளையடிக்கிறது” என்று தனது அறிக்கையில் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.