முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

மத்திய முன்னாள் அமைச்சர் மனைவி கொடூரக் கொலை: குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெண்!

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் மனைவி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி களை, முக்கிய சாட்சியான வேலைக்காரப் பெண், நீதிமன்றத்தில் நேற்று அடையாளம் காட்டினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் மத்திய முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். 1984 ஆம் ஆண்டு முதல் 1996 வரை சேலம் தொகுதியில் எம்.பியாகவும் 1998 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை திருச்சி தொகுதி எம்.பியாகவும் இருந்தார். 1991 முதல் 1993 வரை மத்திய அமைச்சராக பதவி வகித்த இவர், பின் பாஜகவில் சேர்ந்தார். வாஜ்பாய் அரசில் மின்துறை அமைச்சராக இருந்தார். 2000 ஆம் வருடம் காலமானார்.

இவர் மனைவி, கிட்டி குமாரமங்கலம் (70), டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன், இவர் வீட்டுக்குச் சலவை தொழிலாளி வந்துள்ளார். கதவைத் திறந்த வேலைக்காரப் பெண்ணை, தாக்கி ஓர் அறைக்குள் தள்ளினார். பின் இன்னும் 2 பேர் வீட்டுக்குள் வந்தனர். அவர்கள், கிட்டி குமாரமங்கலத்தைத் தலை யணையால் அமுக்கி கொடூரமாகக் கொன்றுவிட்டு நகைகளையும் பணத்தையும் கொள்ளை யடித்து சென்றுள்ளனர்.

இதுபற்றி வேலைக்காரப் பெண் போலீசுக்கு கொடுத்த தகவலை அடுத்து, விசாரணை நடத்தி, சலவைத் தொழிலாளி ராஜூ லகான் கனோஜி (24)வை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி அவர் நண்பர்கள் ராகேஷ் ராஜ் (34), சுராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் மீட்டனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை, நீதிமன்றத்தில் நடந்த அணிவகுப்பில் வேலைக்காரப் பெண் நேற்று அடையாளம் காட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலை: சிறைத் துறை பதிலளிக்க உத்தரவு!

Ezhilarasan

காஞ்சிபுரம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள்!

Halley karthi

5 ஆண்டுகளில் செய்யாததை 3 மாதங்களில் செய்ய நினைக்கிறார் முதல்வர்: ப.சிதம்பரம்

Nandhakumar