பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்ததுள்ளது.
பப்ஜி மதன் தன்னை குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்க அறிவுரைக் கழகத்தில் வாதாடியிருந்தார். இது தொடர்பாக கடந்த 6ம் தேதி பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட விசாரணையானது அறிவுரை கழக நீதிபதிகள் ரகுபதி, ராமன், மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் ரகசியமாக விளையாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக “ஃப்ரீ பயர்” எனும் விளையாட்டு இணையத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளை எவ்விதம் சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து, மதன் என்பவர் யூடியூப் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இவர் தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளை பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. விளையாட்டில் தன்னுடன் ’சாட்’ செய்யும் பள்ளி சிறுமிகளின் வலைப்பக்கங்களுக்கு சென்று பாலியல் ரீதியாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.








