பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸூக்கு விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், வழக்கு கடந்த வந்த பாதையை காணலாம்.
2021 பிப்ரவரி 21 : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா சுற்றுப்பயண பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வந்தார் ராஜேஸ் தாஸ்
2021 பிப்ரவரி 21 : ராஜேஸ் தாஸ் காரில் திரும்பும்போது வழியில் நின்ற பெண் எஸ்பியை ஏற்றி சென்ற போது பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு
2021 பிப்ரவரி 22 : பாலியல் தொல்லை புகார் அளிக்க பெண் எஸ்பி வந்த போது, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் காரை வழிமறித்து சாவியை பறித்துக் கொண்டதாக புகார்.
2021 பிப்ரவரி 22 : பாலியல் தொல்லை குறித்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் புகார் அளித்தார் பெண் எஸ்பி
2021 பிப்ரவரி 27 : இந்திய குற்றவியல் சட்டம் 354 உள்ளிட்ட 4 பிரிகளின் கீழ் ராஜேஸ் தாஸ் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு மற்றும் எஸ்பி கண்ணன் மீதும் வழக்குப்பதிவு2021 நவம்பர் 1 : விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
2022 செப்டம்பர் 6 : மாயமான வழக்கின் ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் சிபிசிஐடி போலீசார்
2023 ஏப்ரல் 13 : சாட்சிகள் உள்ளிட்ட விசாரணை நிறைவு , ஜூன் 16 தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
2023 ஜூன் 16 : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை, முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ 500 அபராதம்






