பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரஃப் காலமானார். அவருக்கு வயது 79.
பாகிஸ்தான் முன்னாள் அதிபரான பர்வீஸ் முஷராஃப் 1943ம் ஆண்டு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிறந்தவர் ஆவார். பிரிவினைக்கு பிறகு முஷராஃப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம் பெயர்ந்தது.
இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு இவர், துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷாரஃப், ராணுவ நடவடிக்கை மூலம் 1999ல் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். தொடர்ந்து 2009ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக பதிவி வகித்து வந்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போருக்கு முக்கிய காரணமாக இருந்தவர் முஷாரஃப் என்பது குறிப்பிடத்தக்கது.
1999ம் ஆண்டு முதல் 2009 வரை அதிபராக இருந்த முஷாரஃப், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் தப்பியோடிவராக அறிவிக்ககப்பட்டார்.







