36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

பாக். நடிகையை மணந்தார் ஷோயிப் மாலிக் | புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் அந்நாட்டை சேர்ந்த நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  இதன் வாயிலாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா – சோயிப் மாலிக்  ஜோடி விவாகரத்து செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.  இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.  இவர் 2003-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை இந்தியா சார்பில் டென்னிஸ் விளையாட்டின் அடையாளமாக இருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2009 ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவு,  2012 பிரெஞ்சு ஓபன்,  2014 அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றார்.  மேலும் 2015ல் விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவு,  2015 அமெரிக்க ஓபன்,  2016 ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றினார்.  இதுதவிர மேலும் பல போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கிடையே தான் கடந்த ஆண்டு சானியா மிர்சா ஓய்வை அறிவித்தார்.

முன்னதாக சானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார்.  இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை இருக்கும் நிலையில் அவரது திருமணமும் விவாதத்தை கிளப்பியது.  ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.  மேலும் பாகிஸ்தானின் சோயிப் அக்தரை அவர் கரம் பிடித்து இருந்தாலும் கூட இந்தியாவுக்காக தொடர்ந்து டென்னிஸ் அரங்கில் விளையாடி வந்தார்.

சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.  அவரது பெயர் இசான் மிர்சா மாலிக்.  இந்நிலையில் தான் கடந்த ஆண்டு முதல் சானியா மிர்சா-சோயிப் மாலிக் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும்,  இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.  இதுதொடர்பாக இருவர் தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில்,  பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகி அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.  இதன் வாயிலாக சானியா மிர்சா – சோயிப் மாலிக் ஜோடி விவாகரத்து செய்துகொண்டது உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading