சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களுடன் உற்சாகமாக கொண்டாடினார்.  இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நேற்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதன் ஒரு…

சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். 

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நேற்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த பகுதி மக்கள் கடந்த 49 ஆண்டுகளாக ஒன்றிணைந்து சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: தவிப்பும், ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.  பின்னர் கிறிஸ்துமஸ் விழாவை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேக் வெட்டி பொதுமக்களுடன் உற்சாகமாக கொண்டாடினார்.  இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மூதாட்டிகளுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.