முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம்?

நடிகை பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மருத்துவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்திருத்தார். அதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை பெங்களூருவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை முடிந்து அவர் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோபாலபுரத்தைச் சேர்ந்த மருத்துவரிடம் அடையாறு மகளிர் காவல்துறை நடத்திய விசாரணையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கட்டாயத்தாலேயே நடிகைக்கு கருகலைப்பு செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகையை தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டலுக்கு அழைத்து சென்று தங்கியிருந்தது தொடர்பான ஆதாரங்கள் காவல்துறைக்கு சிக்கி உள்ளதாகவும், அதனால் அந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை மருந்து தயாரிப்பு!

மும்பையில் போலி தடுப்பூசி முகாம் நடத்திய 10 பேர் கைது!

Halley karthi

அதிமுகவிற்கு ஆதரவாக நடிகர் கஞ்சா கருப்பு பரப்புரை!

Gayathri Venkatesan