முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

ஆப்பிளுக்கு 14 வயது; கடந்து வந்த பாதை

ஸ்மார்ட்ஃபோன் வகைகளில் ஆண்டிராய்டு இயங்குதள செல்பேசிகள் அதிகம் பேர் பயன்படுத்தினாலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பிரியர்களும் ஏராளமானோர் உள்ளனர். ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்த பிளாக்பெர்ரி, சிம்பியன், விண்டோஸ் போன்றவை தங்களை நிலை நிறுத்தி கொள்ள முடியாமல் சந்தையை விட்டு வெளியேறிய நிலையில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் ஆப்பிள் நிறுவனம் தன்னை மொபைல் சந்தையில் நிலை நிறுத்தி விற்பனையிலும் பல சாதனைகள் புரிந்து வருகிறது. கடந்த ஜூன் 29, 2007ம் ஆண்டு முதன் முதலில் சந்தையில் வெளியாகி நேற்றுடன் 14வது ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஜூன் 29 2007-ஆம் ஆண்டு தனது முதல் ஆப்பிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது. அந்த நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனான iPhone 1 குறித்த அறிவிப்பை ஜனவரி 9 2007ம் ஆண்டு வெளியிட்டது. மொபைல் போனானது ஜூன் 29 2007 அன்று மொபைல் போன் சந்தையில் வெளியானது. இந்த மொபைல் போனானது 3.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2 மெகா பிக்சல் கேமராவுடன் வெளியானது.

ஜூலை 11 2008ம் ஆண்டு ஆப்பிள் தனது iPhone 3G மொபைலை ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது 16 GB மெமரியுடன் அதிவேகமாக 3G இணைய சேவையை பயனர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த மொபைலில்தான் முதன் முதலாக இருப்பிட (Location) சேவையை அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக 16 GB மெமரியை 32 GB ஆக அதிகரித்து தனது அடுத்த மொபைலாக iPhone 3GS-ஐ அப்பிள் நிறுவனம் வெளியிட்டது.

2010 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் போனின் பயனர்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. அதன்விளைவாக ஜூன் 24ம் தேதி ஐபோன் 4 – வெளியானது. இந்த மொபைலில் தான் முதன் முதலாக ஃபேஸ்டைம் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியது. மேலும் ஆப்பிளின் ரெடினா டிஸ்ப்ளே ஐபோன் 4ல் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த வருடம் அதாவது 2011ம் ஆண்டு ஐபோன் 4 மொபைலின் சேமிப்பு திறனை 64 ஜிபியாக அதிகரித்து ஐபோன் 4 எஸ் ஆக வெளியிடப்பட்டது.

செப்டம்பர் 15, 2012 அன்று ஐபோன் 5 ஐ வெளியிட்டு மொபைல் உலகில் அடுத்த பரிமாணாத்திற்கு சென்றது ஆப்பிள் நிறுவனம். அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல் போனானது வேகமாக செயல்படும் திறனுடையதாகவும், மெல்லிதாகவும் இருந்தது. அதற்கு அடுத்த வருடம் சிறிய அப்டேட்களை கொடுத்து ஐபோன் 5 எஸ் வெளியிட்டது.

பெரிய திரையுடன் வெளியான ஆண்டிராய்ட் மொபைல்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனமும் பெரிய திரையுடன் 2014ம் ஆண்டு iPhone 6 and iPhone 6 Plus மொபைல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மொபைலானது 5.5 இன்ச் டிஸ்பிளே கொண்டிருந்தது.

இதையடுத்து 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட iPhone 6S and iPhone 6S Plus மொபைலில் 3D டச் தொழில்நுட்பம் வெளியானது. இது மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் சில தொழில்நுட்ப காரணங்களால் இது நிறுத்தப்பட்டது. இதைதொடந்து ஆப்பிள் நிறுவனம் 2016ம் ஆண்டு தனது அடுத்த வெளியீடாக ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மொபைல் போன்களை அறிவித்தது. இதன் மூலம் ஆப்பிள் அடுத்த பரிமானத்திற்கு வளர்ச்சி பெற்றது. இதில், ஆடியோ ஜாக்கை நீக்கியதுடன் முகப்பு பட்டனையும் அகற்றியது. அத்துடன் இந்த மொபைலில் முதன் முதலாக இரட்டை கேமராவை அறிமுகப்படுத்தியது.

ஐபோன் 7 வெற்றியை தொடர்ந்து iPhone 8 series மொபைல் போன்களை செப்டம்பர் 12 2017ம் ஆண்டு வெளியிட்டது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் போனின் டிசைனானது iPhone 4 and 4S-ஐ ஒத்ததாக இருந்தது. ஆப்பிள் மொபைல் சந்தையில் அறிமுகான 10 வருடங்களுக்கு பிறகு ஆப்பிள் நிறுவனம் iPhone X மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைலில் 256 ஜிபி வரை சேமிப்பகம் மற்றும் edge-to-edge display உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வெளியாகி ஆப்பிள் பயனர்களுக்குன் இது சிறப்பான அனுபவத்தை தந்தது.

ஆப்பிள் நிறுவனம் இதுவரை பயன்படுத்தி வந்த டச் ஐடி டெக்னாலஜியை மாற்றி மொபைலை அன்லாக் செய்வதற்காக ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது. அதன்பின் ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் 2021 வரை அடுத்தடுத்து iPhone XR, iPhone XS/iPhone XS Max, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max உள்ளிட்ட மொபைல்களை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12ஐ வெளியிட்டது. இது எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் 5ஜி இணைப்புடன் வெளியானது. அதனுடன் வெளியான ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகியவை 6.7 இன்ஸ் கொண்ட பெரிய சைஸ் டிஸ்ப்ளேயுடன் வெளிவருகின்றன.

என்னதான் ஆப்பிள் மொபைல்களின் விலை அதிகமாக இருந்தாலும், மொபைகளின் பாதுகாப்பு அம்சம், அதன் வேகம் உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிள் மொபைல் பயன்படுத்துவதற்கென தனி பட்டாளமே உள்ளது.

Advertisement:

Related posts

சூரப்பாவிற்கு எதிரான விசாரணை ஆணையம்: நீட்டிப்பு கோர முடிவு!

Saravana

சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை எச்சரிக்கை

Jeba Arul Robinson

ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!

Ezhilarasan