ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் பலவற்றில் இருந்து என்னை விலக்கியதற்கான உண்மை காரணத்தை கூற தயாரிப்பார்கள் தயங்குவது ஏன் என நடிகை டாப்ஸி பன்னு கேள்வி எழுப்பியுள்ளார்.
‘Pati Patni Aur Woh’ என்ற இந்தி படத்தில் இருந்து நடிகை டாப்ஸி பன்னு வெளியேற்றப்பட்டார். பின்னர் அப்படத்தின் தயாரிப்பாளர்கள் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்டது குறித்த செய்தியாளர்களுக்கு டாப்ஸி பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் அப்படத்தில் இருந்து மாற்றப்பட்டதற்கான உண்மையான காரணங்களை வெளிப்படுத்த அவர்கள் தயங்குகிறார்கள். நான் அப்படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஊடக செய்திகளின் மூலம்தான் தெரிந்துக்கொண்டேன்” என கூறினார்.
தமிழ் சினிமாவில் ஜரீனாக மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ள டாப்ஸி பன்னு , ஆடுகளத்திற்கு பிறகு “ஆரம்பம்”, “காஞ்சனா 2” , “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆடுகளம் படத்திற்கு பிறகு தாப்ஸி பன்னு தமிழில் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறவில்லை.
இதன் பின் பாலிவுட்டில் “பேபி”, “பிங்க்” ,”பத்லா” போன்ற படங்களில் நடித்து, தற்போது பாலிவுட்டில் படு பிசியாக டாப்ஸி பன்னு வலம் வருகிறார். அனைத்து மொழி சினிமாத்துறைகளிலும் ஒரு படத்திற்க்காக குறிப்பிட்ட கதாநாயகன் மற்றும் நாயகி தேர்ந்தெடுக்கப்படுவதும், பின்னர் சில காரணங்களால் அவர்கள் அப்படத்தில் இருந்து வெளியேற்றப்படுவது தொடர்கதையாகி உள்ளது.







