66 வயதில் இரண்டாவது திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்!

66 வயதில் தனது 38 வயது காதலியை கிரிக்கெட் வீரர் அருண்லால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்குவங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்…

66 வயதில் தனது 38 வயது காதலியை கிரிக்கெட் வீரர் அருண்லால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேற்குவங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அருண்லால் (66). இவர் புல்புல் சஹா (38) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் திருமண சடங்குகள் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கியது. மஞ்சள் வைக்கும் நிகழ்ச்சியை புல்புல் சஹா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், கேக் வெட்டித் திருமணத்தைக் கொண்டாடினர்.

அருண்லாலுக்கு முதலில் ரீனா என்பவருடன் திருமணமான நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர். ரீனா உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், ரீனாவை தற்போது அருண்லால்தான் கவனித்து வருகிறார். இரண்டாவது திருமணத்துக்குப் பிறகும் ரீனாவை அருண்லால்தான் பார்த்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.