முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா காலமானார்

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டி ராஜா உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்துள்ள சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் வீரபாண்டி ராஜா உயிரிழந்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் திமுகவின் பலமாக அறியப்பட்டவர்தான் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அவரது அதிரடி கட்சிப்பணிகள் மாவட்டத்தில் திமுகவுக்கு பெரும் பலத்தை சேர்த்தது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இவரின் துணிச்சலை பாராட்டியுள்ளார். இவரின் தொடர்ச்சியாக இவரது மூத்த மகன் செழியன் அரசியல் வாரிசாக செயல்பட்டார். ஆனால், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததையடுத்து இரண்டாவது மகன் வீரபாண்டி ராஜா அரசியலில் நுழைந்தார்.

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவாகவும், தேர்தல் பணிக்குழுத் தலைவராக பணியாற்றி வந்த ராஜா, தனது பிறந்த நாளான இன்று வீட்டில் கொடி ஏற்றிக்கொண்டிருக்கையில், திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தனது பிறந்தநாளிலேயே அவர் உயிரிழந்துள்ள சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

’மாணவனை அடிப்பேன் என்றது ஏன்?’ பிரபல நடிகர் விளக்கம்

Gayathri Venkatesan

பெண் குழந்தையை அனாதை எனக் கூறிய தந்தை கைது!

Vandhana

கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!

Ezhilarasan