இலங்கையில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், தனியார் நிறுவனங்கள் எரிப்பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணம், கோதுமை மாவு, உணவு வகைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருள்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்து உள்ளன. இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனக்கூறி பொதுமக்களும் சாலையில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் இலங்கை அரசு பல்வேறு நாடுகளிடம் உதவியை தேடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இலங்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்த பொருட்கள் உதவியாக இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கையில் எரிபொருட்கள் விலை உச்சத்தை அடைந்துள்ளதால், அந்நாட்டு அரசு மாற்று வழிகளில் யோசனை செய்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, எரிப்பொருட்களை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யலாம் என அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
அனைத்து தனியார் பெட்ரோலிய நிறுவனங்களும் எரிப்பொருட்களை இறக்குமதி செய்து தொழிற்சசாலைகளுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசின் பெட்ரோலிய நிறுவனத்தின் சுமை குறையும் என இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.