ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது 5 வழக்குகள் தொடரப்பட்டன. இதில், ஏற்கனவே, 4 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 4 வழக்குகளிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 14 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 5வது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அண்மைச் செய்தி: மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற போராடுவோம்: முன்னாள் பிரதமர் தேவ கவுடா
தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு, நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தீர்ப்புக்குப் பிறகு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தள் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனது தந்தை மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யப்படும் என கூறினார். மேல் முறையீட்டில், அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








