மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற போராடுவோம் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முதலமைச்சர் சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, மதவாத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதற்காக, முதலமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும், அவருக்கு உறுதுணையாக தாங்கள் இருக்கிறோம் என கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற போராடுவோம் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்ததாகவும், தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பிறப்பு குறித்து விமர்சித்த அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதவி விலக வேண்டும் என்று சந்திர சேகர ராவ் வலியுறுத்தி வருகிறார்.
அத்தோடு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நிகழ்த்திய துல்லிய தாக்குதலுக்கான பெருமை நமது ராணுவத்துக்கே சேரும் என்றும், பாஜகவுக்கு அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரங்கள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேவ கவுடா வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







