முக்கியச் செய்திகள் தமிழகம்

நிதியமைச்சர் பி.டி.ஆரை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

மனிதன் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை நிறுத்தி விட்டு காற்றை மிச்சப்படுத்தி விட்டேன் என்று கூறுவது போல் மக்களின் சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறுத்தி விட்டு வருவாய் பற்றாக்குறை இரு மடங்காக குறைத்ததாக நிதியமைச்சர் கூறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், கொரோனா
தாக்கத்தால் மக்கள் வாட்டி வதைக்கும் நிலையில், சமூக பாதுகாப்பு திட்டங்களை
நிறுத்தியதை நியாயப்படுத்தும் வகையில் கடந்த நிதியாண்டில் 4.61 சதவீதமாக
இருந்த நிதி பற்றாக்குறை தற்பொழுது 3.25 சகவீதயாக குறைக்கப்பட்டுள்ளது என
நிதியமைச்சர் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமூக நல திட்டங்களை நிறுத்தி விட்டு நிதி பற்றாக்குறை குறைந்தது என நிதியமைச்சர் கூறுவது, சுவாசிக்கும் காற்றை நிறுத்தி விட்டு நான் காற்றை மிச்சபடுத்தி விட்டேன் என்கிற கருத்து போல் உள்ளது. பொருளாதாரம் படித்தவருக்கு மக்கள் வாழ்க்கை பற்றி தெரியுமா, ஒரு மனிதனுக்கு தேவை உணவு, உடை, இருப்பிடமாகும், திமுகவின் 15 மாத கால ஆட்சியில் மக்களுக்கு வாழ்வாதார திட்டங்கள், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள், கல்வி திட்டங்கள், வேலை வாய்ப்பு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம் என நிதியமைச்சர் பட்டியலிட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். படித்தவருக்கு மக்களின் சமூக திட்டங்கள் குறித்து தெரியவில்லை. ஒருபுறம் அனைத்து வசதிகளும் உள்ள உயர்ந்த மக்கள் உள்ளனர். மறுபுறம் அடிப்படை வசதி இல்லாமல் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களை கரை சேர்க்க நிதி கையாளப்படுகிறதா? தமிழக நிதிநிலை வீட்டுக்கு கணக்கு அல்ல. செலவுகளை குறைக்க மக்களின் அடிப்படை தேவைகளை செய்து தருவது தார்மீக கடமையாகும். அதை கேட்க எதிர்க்கட்சிக்கு தார்மீக உரிமை உண்டு என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

80 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை 2 மணி நேரமாக போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்!

Jayapriya

மக்களின் நம்பிக்கையை பெறுவாரா இலங்கையின் ”தற்செயல்” அதிபர்?

Web Editor

முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயருமா? அமைச்சர் சொல்வது என்ன

Web Editor