வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்!

வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும்…

வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  அவர்கள் அங்குள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்வது வழக்கம்.  அங்கு செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.  இதனிடையே,  வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்களில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.  கடந்த சில மாதங்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில்,  வெள்ளியங்கிரி கோயிலுக்கு மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மலையேறும் பக்தர்கள் முழு உடல் பரிசோதனை செய்த பிறகே மலையேற அனுமதி வழங்கப்படும் எனவும் பக்தர்கள் குழுவாகவும்,  வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும்,  மாற்றுப் பாதையில் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.