முக்கியச் செய்திகள் இந்தியா

டீசல் விலை குறைப்பு மனநிறைவைத் தரவில்லை-லாரி உரிமையாளர்கள்

டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7 ஐ மத்திய அரசு குறைத்தபோதிலும் அதனால் தங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் பிற வாகன நிறுவனங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் ஆர்.வாங்லி கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் டீசல் விலை ரூ.66 இல் இருந்து ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. 1970 களில் கனரக லாரிகள் மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கினார்கள். அதற்குக் காரணம் டீசலை விட மண்ணெண்ணெய் 25 பைசா குறைவாக இருந்தது. நாங்கள் கிலோமீட்டருக்கு ரூ.1 அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், நாங்கள் 50 பைசாவை மட்டுமே அதிகரித்து இருக்கிறோம். நாங்கள் இன்னும் அதிகரித்தால் எங்கள் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 “நீண்ட தூரம் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் உள்ளன. அதில் சிறிய ரக வாகனங்களையும் சேர்த்தால் 11 லட்சம் வரை அதிகரிக்கும். சாலை வரி கட்டுவதற்கு லாரி உரிமையாளர்கள் கால அவகாசம் கேட்டனர். ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை. டீசல் விலை போக்குவரத்து துறையை மட்டுமின்றி பிற அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர்த்த காரணமாகியுள்ளது. டயர், லூப்ரிகண்ட் என வாகன பராமரிப்பு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் எங்கள் தொழிலை கைவிட நேரிடும். எங்களுக்கு வேறு எந்த வேலையும் தெரியாது என்பதால் இந்தத் தொழியையே செய்து வருகிறோம்” என்று லாரி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த பி.வி. சுப்ரமணி கூறுகையில், ” தேர்தல் வரும்போதுதான் டீசல் விலை குறைக்கைப்படுகிறது. டீசல் விலை அதிகரிக்கும் பொழுது சரக்குக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
ஆனால், டீசல் விலை குறையும்போது பொருட்களின் விலையும் குறைகிறது. இதனால், ஏற்கனவே பல நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் கூட நாங்கள் பணிபுரிந்தோம். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காவேரியின் கூடுதல் தண்ணீர் சென்னை கொண்டுவரப்படும்: கே.என்.நேரு

Vandhana

ரஷ்யா-உக்ரைன் போர்: பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயம்?

Arivazhagan Chinnasamy

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

Arivazhagan Chinnasamy