பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, “தாயை விட, தாய் நாட்டை உயிரினும் மேலாக போற்றும் நாட்டுப் பற்று மிக்கவர்கள் வாழும் நம் நாட்டில், தேனி மாவட்டத்தில் உள்ள ஓர் பள்ளியில் தேச விரோத சக்திகள் சிலர் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தின் மீது மது பாட்டிலை கட்டி தொங்க விட்ட செய்தியானது தேசியக் கொடிக்கும், கொடிக்கம்பத்திற்கும் மிகப்பெரிய அவமரியாதை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேசியக் கொடியை கீழே விழாமல் பாதுகாத்து தன்னுயிரைத் தியாகம் செய்த திருப்பூர் குமரன் பிறந்த நாட்டில் மதுவினால் மதியிழந்து இளைஞர்கள் சீரழிவதை காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம். இளைஞர்கள் எப்படி போனால் என்ன? “ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




