வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5% தள்ளுபடி!

பொள்ளாச்சியில் 100% வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் ஒன்றில் உணவின் விலையில் ஐந்து சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டது பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்களிக்க தகுதி பெற்ற…

பொள்ளாச்சியில் 100% வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் ஒன்றில் உணவின் விலையில் ஐந்து சதவீதம் தள்ளுபடி அளிக்கப்பட்டது பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரும் தங்களது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. தன்னார்வ நிறுவனங்களும் இது குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில் பொள்ளாச்சியில் 77 புள்ளி 28 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி-உடுமலை சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஓட்டுப் பதிவு செய்ததற்கு அடையாளமான விரலின் மை அடையாளத்தைக் காண்பித்து உணவு உண்பவர்களுக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு இதுபோல் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும் அந்த உணவகத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.