முக்கியச் செய்திகள் தமிழகம்

“உணவுப் பொருட்கள் விலையேற்றம் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது”

“உணவுப் பொருட்கள் விலையேற்றம் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது” என்று மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நுகர்வோருக்கான விலைவாசி உயர்வு குறித்து அவ்வப்போது புள்ளி விவரங்கள் மத்திய அரசின் புள்ளியியல் துறையால் வெளியிடப்படுகின்றது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தென் மாநிலங்களில் உணவுப் பொருட்கள் விலையேற்றம் குறைவாக உள்ளது.

இந்திய அளவில் விலைவாசி ஏற்றம் 7.6%, தமிழ்நாட்டில் விலையேற்றம் 3.1% அளவுதான் உள்ளது. அதற்கு காரணம் பொது விநியோக முறையே ஆகும். பருப்பு, பாமாயில் கொடுக்கும்போது உணவிற்கான செலவை கணிசமான முறையில் குறைக்கின்றது.

ரூ 2,205 கோடி அரிசிக்கு மட்டும் மானியமாக தமிழ்நாட்டில் கொடுக்கப்படுகின்றது. ரூ 1,505 கோடி பருப்பிற்கு மட்டும் ஆண்டொன்றுக்கு மானியமாக தமிழ்நாட்டில் கொடுக்கப்படுகின்றது. 

பொது விநியோகத் திட்டமானது சாமானியர்களை விலைவாசி ஏற்றத்திலிருந்து 30-35% பாதுகாக்கும். பொது விநியோகத் திட்டத்தில் தானியங்கள், அரிசி, எண்ணெய் முக்கியமானது. திருட்டு வேலை பார்க்கிறார் என்பதற்காக பசியோடு விட முடியாது.

யாருக்கு தேவை, தேவையில்லை என்பதை அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் ஜெயரஞ்சன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜவுளி கடையில் துணி வாங்குவது போல் நடித்து திருடிய இரண்டு பெண்கள் கைது

G SaravanaKumar

தனியார் ஓடிடியில் வெளியாகும் நயன் – விக்கி திருமண வீடியோ

Web Editor

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’

Halley Karthik