தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, 7 பேர் கொண்ட மத்திய குழு, நாளை சென்னை வரவுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதையடுத்து மழை வெள்ளத்தால், ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில், உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா, நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண் துறை இயக்குநர் விஜய் ராஜ்மோகன், மின்சார துறை இணை இயக்குநர் பாவ்யா பாண்டே, நீர்வள ஆணைய சென்னை மண்டல இயக்குநர் தங்கமணி, சாலை போக்குவரத்து பிராந்திய அலுவலர் ரனஞ்ஜெய்சிங் மற்றும் ஊரக வளர்ச்சி துறை செயலர் வர பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு நாளை நண்பகலில் சென்னை வரவுள்ளதாகவும், சென்னை, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







