வெள்ள பாதிப்பு – தூத்துக்குடி மீனவர் கல்லூரி மாணவிகளை பத்திரமாக மீட்ட மீட்பு படையினர்.!

வெள்ள பாதிப்பு காரணமாக மீனவர் கல்லூரி அலுவலர் குடியிருப்பில் சிக்கியிருந்த மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…

வெள்ள பாதிப்பு காரணமாக மீனவர் கல்லூரி அலுவலர் குடியிருப்பில் சிக்கியிருந்த மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மழைநீர் தேக்கம் மற்றும் அதிகனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ளத்தால் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர் கல்லூரி மாணவிகள் அலுவலர் குடியிருப்பில் சிக்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.