அதிதீவிர புயலாக மாறிய பிபோர்ஜோய் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிபோர்ஜோய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து சவுராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி- பாகிஸ்தானின் கராச்சி அருகே ஜக்காவ் துறைமுகம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், 6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: