ஆடிப்பெருக்கு: அலைமோதிய புதுமணத் தம்பதிகள் கூட்டம்

அரியலூர் – ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொள்ளிடம் பகுதிக்கு அலைமோதிய புதுமண தம்பதிகள் கூட்டம். அரியலூர் மாவட்டம் அணைக்கரை கொள்ளிடம் கீழணை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் வருகை புரிந்து புது…

அரியலூர் – ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொள்ளிடம் பகுதிக்கு அலைமோதிய புதுமண தம்பதிகள் கூட்டம்.

அரியலூர் மாவட்டம் அணைக்கரை கொள்ளிடம் கீழணை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் வருகை புரிந்து புது கயிறு மாற்றி செல்வது வழக்கம்.

ஆடிப்பெருக்கு முன்னிட்டு புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான தம்பதிகள் வருகை புரிந்து ஆற்றில் மண்ணால் பிள்ளையார் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து மாலையிட்டு பழம் பச்சரிசி மாவு உள்ளிட்டவர்களை படையலிட்டு புது தாலி மாற்றி திரண்டு வரும் நீரை தெய்வமாக வழிபட்டு செல்வது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவானது பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் மத்தியில் பெரிய அளவில் கொண்டாடப்பட முடியாமல் இருந்து வந்த நிலையில். இந்த ஆண்டு ஆற்றில் அதிகப்படியான நீர்வரத்தும் இருந்த காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு புது தாலி கயிற்றினை மாற்றி வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.