பாம்பன் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து இலங்கை கடற்படையிடம் விசாரணை நடத்துவேன் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசி வாயிலாக தனது கருத்தை தெரிவித்தார். தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இலங்கை கடற்படை தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும், துப்பாக்கிச்சூட்டில் யார் ஈடுபட்டாலும் தவறுதான் என்று தெரிவித்த இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாம்பன் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து இலங்கை கடற்படையிடம் விசாரணை நடத்துவேன் எனவும் தெரிவித்தார்.







