நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,698 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 48,698 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 3,01,83,143 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல 1,183 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,94,493 ஆக அதிகரித்துள்ளது. 64,818 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,91,93,085 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திருமபி உள்ளனர். தற்போது 5,95,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







