ரசாயன மருந்துகள் கலந்ததால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்!

விருத்தாசலம் அருகே கோயில் குளத்தில் ரசாயன மருந்துகள் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்துள்ளன. விருத்தாசலம் வெண்மலையப்பர் கோயில் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று ரசாயன மருந்து கலந்து முந்திரிக்கு தெளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.…

விருத்தாசலம் அருகே கோயில் குளத்தில் ரசாயன மருந்துகள் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்துள்ளன.

விருத்தாசலம் வெண்மலையப்பர் கோயில் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று ரசாயன மருந்து கலந்து முந்திரிக்கு தெளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவ்வாறு தண்ணீர் எடுக்கும் போது குளத்து தண்ணீரில் ரசாயன மருந்து கலந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் குளத்தில் வளர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மீன்கள் ஏரி முழுவதும் செத்து மிதந்தது. குடிநீரில் ரசாயன மருந்து கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply