வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளதற்கு நடிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இன்று தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளது. அதை அறிவிக்கும் வகையிலும், புதிய திரைப்படங்களின் அறிவிப்பு குறித்தும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் சென்னை தி. நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சரத்குமார், ஆர்வ், ஜீவா, பிரசாந்த், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஆரி அர்ஜூனன், பா. விஜய், வருண், இயக்குனர்கள் ஆர்.கே செல்வமணி, ஆர். வி. உதயகுமார், சுந்தர்.சி , ஏ.எல் விஜய், பேரரசு , நடிகை சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சரத்குமார், வேல்ஸ் நிறுவனம் தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தவர் , சிறந்த அனுபவமிக்க இந்த நிறுவனம் சரியான நேரத்தில் பங்கு சந்தையில் வந்துள்ளது என்றும் பாராட்டி பேசினார்.
சரத்குமாரை தொடர்ந்து பேசிய, நடிகர் ஜீவா, சரத்குமார் சார் பேசிவிட்டால் ஒரு ஐடியா கிடைத்து விடும். என்ன பேச வேண்டும் என்று தெரிந்து விடும். பல பேர் எதற்காக வந்திருக்கிறோம் என்றே தெரியாமல் வந்திருக்கிறார்கள். நாங்கள் எல்லாரும் ஒரு குடும்பமாக வந்து இந்த கம்பெனியை அடுத்த கட்டத்திற்க்கு சென்று கொண்டு இருக்கிறது. வேல்ஸை பொறுத்தவரை கல்வி, மருத்துவம், திரைப்படங்கள் என எல்லாவற்றிலும் வளர்ந்து வருகிறார்கள்.
நானும் எனது பணியையும், பங்கையும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வேன். தமிழகத்தில் உள்ள முக்கியமான கம்பெனியில் இதுவும் ஒன்றாகும். நாங்கள் போடும் முதலீடு நிச்சயமாக பெரிய லாபத்தை தரும் என்று நம்புகிறேன். இந்த குடும்பத்தில் நாங்களும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் பிரசாந்த், இது குடும்ப விழா. சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை இதை தாண்டி நல்ல படங்களை கொடுத்து வரும் வேல்ஸ் நிறுவனம், இன்று தேசிய பங்கு சந்தையிலும் நுழைந்துள்ளார்கள். இது தொடக்கம் தான். அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் இந்த பெரிய நிறுவனம் நிறைய சப்ஸ்கிரைபர்ஸ் உடன் முதலீட்டாளர்களை வைத்து இருப்பது பெரிய விஷயம் என்றும் பாராட்டினார். அடுத்த 5 வருடத்தில் இந்தியா மட்டுமின்றி நியூயார்க், லண்டன் என உலக அளவில் இந்த நிறுவனம் பெரிதாக மாறும் எனவும், மேலும் மேலும் சர்வதேச திரைப்படங்களை எடுத்து இந்தியாவுக்கு பெருமை தேடி தர வேண்டும். மற்றவர்கள் சொன்னது போல நானும் எனது உழைப்பை போட்டு முதலீடு செய்து இந்த நிறுவனத்தை முன்னேற்ற போவதாகவும் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா