விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் இப்படியொரு சாதனை.. ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அணி!

15வது ஐபிஎல் சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 66 லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

கிட்டத்தட்ட ஐபிஎல் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இந்நிலையில், நேற்று (மார்ச் 18) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் லக்னோ அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. மும்பை டி.ஒய். பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடெமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக், கேப்டன் லோகேஷ் ராகுல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை ரசிகர்கள் காணாத வகையில் ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் வெளுத்து வாங்கினர். தென்னாப்பிரிக்க வீரரான குவின்டன் டி காக் மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பதிவு செய்தார்.
கொல்கத்தா அணி வீரர்கள் எத்தனையோ உத்திகளை பயன்படுத்தி பந்துவீசிப் பார்த்தனர். ஆனால், அவர்களின் உத்திகள் இரு வீரர்களிடமும் எடுபடவில்லை. 11.3வது ஓவரில் குவின்டன் டி காக் அரை சதம் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, 13.5 ஓவரில் ராகுலும் அரை சதம் பதிவு செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் சிறப்பாக பந்துவீசும் ரஸலுக்கும் இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் கூட கிடைக்காதது ஏமாற்றமே. ரஸல் வீசிய 17.4வது ஓவரில் பவுண்டரியை பதிவு செய்து சதத்தைப் பதிவு செய்தார் குவின்டன் டி காக். உமேஷ் யாதவ் வீசிய 3வது ஓவரின் 2வது பந்து, டி காக் பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த அபிஜீத் தோமரிடம் சென்றது. சரியாக கணிக்காமல் விட்டதால் அந்த அற்புதமான கேட்ச் வாய்ப்பை தோமர் கைவிட்டார். டி காக்கை ஆட்டமிழக்கச் செய்திருந்தால் ஒருவேளை ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கக் கூடும்.

இவ்வாறாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டி காக்கும், ராகுலும் 210 ரன்களை சேர்த்தனர். இதுவரை ஐபிஎல் போட்டியில் எந்தவொரு அணியும் விக்கெட்டை பறிகொடுக்காமல் 20 ஓவர்கள் வரை விளையாடியதில்லை. அந்த வகையில் அறிமுகமான முதல் சீசனிலேயே புதிய சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி. லக்னோ ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் இவர்களின் ஆட்டம் ரசிக்கச் செய்தது.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் நிதீஷ் ராணா (42 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் (50 ரன்கள்) எடுத்தனர். அடுத்தபடியாக ரிங்கு சிங் 40 ரன்கள் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. அத்துடன், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பும் அந்த அணிக்கு பறிபோனது. லக்னோ தரப்பில் மோசின் கான், மார்கஸ் ஸ்டாய்னிஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொதப்பிய ஹைதராபாத்; கொல்கத்தா அணிக்கு 116 ரன்கள் இலக்கு

Halley Karthik

இன்று பரபரப்பான இறுதி நாள் ஆட்டம்: வெற்றியை ருசிக்குமா இந்தியா?

Vandhana

IPL 2021 Auction: ஏலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய வீரர்கள்

Saravana Kumar