டி20 உலக கோப்பை தொடரின் 10-வது சீசன் நேற்று தொடங்கியது. மும்பையில் நேற்று நடைபெற்ற 3வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி இந்திய அணி 77 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில், கடைசியில் கேப்டன் சூரியகுமார் யாதவின் நிதானமான ஆட்டத்தால் இந்தியா 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.
அமெரிக்காவின் வான் ஷால்க்விக் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. இறுதியில், அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி உலக சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.







