முக்கியச் செய்திகள் தமிழகம்

‘பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’ – முதலமைச்சர் வலியுறுத்தல்

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்த அவர், பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 19.1.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் நெசவாளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் கடுமையான நிலையினையும் விளக்கியும், மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதேபோல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 16.5.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: ‘அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்? 50 பேர் விருப்பம்!’

அதுமட்டுமின்றி, எம்.பி. கனிமொழி தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, மத்திய நிதித்துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அளித்தனர். இந்நிலையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

Arivazhagan CM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது

Ezhilarasan

திமுகவைப் பின்பற்றித்தான் அதிமுக திட்டங்களை அறிவிக்கிறது: ஸ்டாலின் விமர்சனம்

Jeba Arul Robinson