இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நேற்று (ஜுன் 20) மாலை நடைபெற்றது.

இதில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இரு நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இளம் இந்திய அணி இப்போட்யில் களமிறங்கியுள்ளது.

சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைதொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது.

கில் 127 ரன்களும் , பண்ட் 65 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இங்கிலாந்து மண்ணில் முதல் நாளில் இந்திய அணி 350 ரன்னுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் இந்திய மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.