நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் : 3-ஆம் நாள் முடிவில் இந்தியா 118 ரன்கள் முன்னிலை!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போடியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெடுகள் இழப்புக்கு 486 ரன்கள் குவித்தது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (நவ. 19) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். இந்நிலையில், 89 பந்துகளில் 85 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால், மேட் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணியைவிட 209 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் இருந்த கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனிடையே, கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தினார். மறுமுனையில், 175 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த படிக்கல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 136 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் சிறப்பாக ஆடி 98 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆகினார். மறுமுனையில் ரிஷப் பண்ட் அரை சதமடித்தார். இதனிடையே, மூன்றாம் நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 486 ரன்கள் குவித்து, 118 ரன்கள் முன்னிலை பெற்றது. ரிஷப் பண்ட் 55, அன்ஷுல் கம்போஜ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.