இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்களில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இந்தியா-இலங்கை இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. டி20 போட்டி தொடரில் தோல்வியை தழுவிய இலங்கை அணி இந்த போட்டியில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தீவிரம் காட்டும்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
டி20 போட்டிகளில் ஓய்வில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்த போட்டியில் அணியில் இடம்பெறுகிறார்கள். மீண்டும் முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பதால் இந்திய அணி வலுவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.