திமுக எம்பி கனிமொழி வாக்குறுதி அளித்தது போல் தான் இயக்கிய பேருந்தில் பயணம் செய்ததது மகிழ்ச்சி அளிப்பதாக கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
கோவை சென்ற திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் செய்தார். ஷர்மிளாவை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த கனிமொழி, அவருக்கு கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார், இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா கூறியதாவது:
ஏற்கனவே தொலைபேசியில் பேசிய போது கோவை வந்தால் நான் இயக்கும் பேருந்தில் பயணம் செய்வேன் என கனிமொழி தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது பேருந்தில் பயணம் செய்து கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியது மகிழ்ச்சியை தருகிறது. அவர் பேருந்தில் பயணம் செய்த போது நான் பேருந்தை இயக்கியதால் என்னால் அதிகமாக பேச முடியவில்லை. பின்னர் பீளமேட்டில் இறங்கியவுடன் என்னுடன் பேசினார். என்ன உதவி வேண்டுமானாலும் செய்து தருவதாக கூறினார் என ஷர்மிளா தெரிவித்தார்.







