தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடி விடுவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி உள்ளிட்ட அனைத்து அணியின் முழு செலவையும் ஏற்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த போட்டியில், உலகளவில் சிறந்து விளங்கும் பல முக்கிய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அண்மைச் செய்தி: ‘என்ன இருந்தாலும் அடிப்படையில் நான் டெல்டாகாரனாயிற்றே! – முதலமைச்சர்’
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேவையான விளையாட்டு மையங்களை அமைக்க ரூ.5 கோடியும், கொரனா தடுப்பு நடவடிக்கை, கோவிட் பரிசோதனை, மருத்துவ குழுவுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
https://twitter.com/news7tamil/status/1532180344736468992
இந்நிலையில், வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு 2700 அறைகள், உணவு அடிப்படை வசதிகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ரூ.10 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடர் வரலாற்றிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பியாட் தொடராக 44-வது செஸ் ஒலிம்பியாட் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







